இந்தியா தலைமையிலான சர்வதேச மத்தியஸ்தம் பிராந்திய சுயாட்சி – போராளிகள் கட்சியின் மாநாட்டில் பரிந்துரைப்பு

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை வென்றெடுக்க 13 ஆம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாக வைத்து பிராந்தியங்களின் சுயாட்சி அதற்கு மேலான முறை ஒன்றை ஸ்தாபித்தல் மற்றும் பிராந்திய வல்லரசான இந்தியா தலைமையிலான சர்வதேச மத்திய ஸ்தலம் ஏற்படுத்தப்பட வேண்டும் என போரநாயக போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.

இன்று சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற ஜனநாயக போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா  (வேந்தன்) கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழப் போர் ஓய்வடைந்த பின்னர் சுமார் 13 வருடங்களில் கடந்த நிலையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

 நாம் இந்த மண்ணிலே தனக்குரிய வரலாற்று மாண்புகளுடனும் சுய நிர்ணய  உரிமையுடனும் வாழ வேண்டும் எனில் எமக்கென்று ஓர் சுதந்திர தேசத்தை உருவாக்க வேண்டும் என பல சதப்தங்களாக போராடி இருக்கிறோம்.

ஜனநாயக ஏது நிலைகள் தகர்ந்து போன சூழ்நிலையில் கட்டமைக்கப்பட்ட  ஓர் இன அழிப்புப்  முறையை எதிர்கொள்வதற்காக ஏந்தப்பட்ட ஆயுதங்கள் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாக வியாபித்திருந்தது. 

தாயக விடுதலைக்கான பல அர்ப்பணிப்புகள் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் திம்பு கோட்பாட்டில் இருந்து ஜெனிவாவரையிலான அரசியல் தீர்வு பற்றி பல முனைப்புகளிலும் ஈடுபட்டுள்ளோம்.

சிங்கள பௌத்தம் என்ற அரசியல் கோட்பாடு அதனை நிலை நிறுத்துவதற்காக தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியுமே இன்று வரை பிரச்சனைக்கு மூலவேர் என்பதை இலங்கை சிங்கள தேசம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதை எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்காக பின்வரும் முன்மொழிவுகளை கொள்கை நீதியாக பரிந்துரைக்கிறோம்.

தமிழருக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்துவதுடன் தமிழ் தேசியக் கட்சிகள் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள், போராளிகள் புலம்பெயர் தமிழர்களின் வகிபாகம் இருக்க வேண்டும்.

ஈழத் தமிழருக்கான அரசியல் தேர்வு முன்மொழிவை தமிழர் தரப்பின் ஏகோபித்த வரைவாக இலங்கை அரசுக்கும் ஏனைய வகிபாவங்களுக்கும் சமர்ப்பித்தல்.

எந்த ஒரு பேச்சு வார்த்தையின் போதும் பிராந்திய வல்லரசான இந்தியாவின் தலைமைத்துவத்தாடலான சர்வதேச மத்தியஸ்தம் மற்றும் 13வது திருத்தத்தை அடிப்படையாக வைத்து பிராந்தியங்களின் சுயாட்சி அதற்கு மேலான பொறிமுறை ஒன்றை தாபித்தல்.

மற்றும் ஈழத் தமிழருக்கான தீர்வு முயற்சிகள் சம்பந்தமான எந்த ஒரு பேச்சுவார்த்தை முனைப்பும் ஒரு காலவரையும் சட்டத்தை அடிப்படையாக வைத்தே நடாத்தப்பட வேண்டும் என அவர் அவர் மேலும் தெரிவித்தார். 


Leave a Reply