இன்று இடம்பெறவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன, பகுதி இரண்டு வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பகுதி ஒன்று வினாப்பத்திரமே முதலில் வழங்கப்பட்டது.
இது மிகவும் கடினமானது என்பதால், பாடப் புத்தகங்களிலுள்ள விடயங்கள் அடங்கிய பகுதி இரண்டு வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு பெற்றோர்களால் கோரப்பட்டிருந்தது.
இதற்கமைய, பகுதி இரண்டு வினாப்பத்திரம் முற்பகல் 9.30 அளவில் வழங்கப்பட்டு, 10.45 அளவில் நிறைவுச் செய்யப்படும். அதில் 60 வினாக்கள் அடங்குகின்றன.
பின்னர் 40 வினாக்கள் அடங்கிய பகுதி ஒன்று வினாப்பத்திரம், முற்பகல் 11.15 இல் இருந்து மதியம் 12.15 வரையான ஒரு மணித்தியாலம் வழங்கப்படும்.
அதேபோன்று செலவைக் குறைப்பதற்காக இந்த முறை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக வரவுப் பதிவேடு முறை கையாளப்படும்.
எனவே, பதற்றம் இன்றி பரீட்சைக்கு சிறந்த முறையில் மாணவர்களை பரீட்சைக்கு தோற்றுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.