யாழ். கடற்பரப்பில் மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகளில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தை அண்மித்த சர்வதேச கடலில் மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகளில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக, ஆண் ஒருவரும், 2 வயதான குழந்தையொன்றும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தை அண்மித்த சர்வதேச கடலில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து, இலங்கை கடற்படையினால் 104 பேர் மீட்கப்பட்டு, இன்றைய தினம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

Leave a Reply