மாகாண விளையாட்டு விழாவில் சாத்தித்த யாழ்,முல்லைத்தீவு அணிகள்

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்ற வடமாகாண விளையாட்டு விழாவில் 1ம், 2ம் இடங்களை  யாழ்ப்பாண, முல்லைத்தீவு அணிகள் பெற்றுள்ளன.

 முல்லைத்தீவு மாவட்ட அணி தொடர்ந்து 3 வது தடவையாக 2ம் நிலையினை தமதாக்கியுள்ளது.

வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் இடையே  மாகாண விளையாட்டுத் திணைகளத்தினால் குறித்த போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தது.
 
1 ம் இடம் யாழ்ப்பாணம்
தங்கம் 86, வெள்ளி59, வெண்கலம் 38 பெற்ற மொத்த பதக்கம் 183

2ம் இடம் முல்லைத்தீவு
தங்கம் 42, வெள்ளி 39, வெண்கலம் 42 மொத்த பதக்கங்கள் 129

3ம் இடம் மன்னார் மாவட்டம்
தங்கம் 19, வெள்ளி 16, வெண்கலம் 20 பெற்ற மொத்த பதக்கம் 55

4ம் இடம் வவுனியா மாவட்டம்
தங்கம் 19, வெண்கலம் 12, வெண்கலம் 17 பெற்ற மொத்த பதக்கம் 48

5ம் இடம் கிளிநொச்சி
தங்கம் 14, வெள்ளி 22, வெண்கலம் 30 பெற்ற மொத்த பதங்கம் 66   

வட மாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர்  முகுந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

Leave a Reply