அஞ்சல் பெட்டியில் தேன் கூடு – மக்கள் அவதி!

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அஞ்சல் பெட்டியில் தேன் கூடு ஒன்று உள்ளது.

இதனால் அந்த பெட்டியில் கடிதங்களை போட செல்லும் மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்த பெட்டி உள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் அத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் வைத்திய சாலைக்கு வந்து செல்கின்றனர்.

தங்கள் அன்றாட கடிதங்கள் அந்த அஞ்சல் பெட்டியில் போட முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.

இது குறித்து ஹட்டன் அஞ்சல் நிலைய உயர் அதிகாரி மற்றும் டிக்கோயா அஞ்சல் நிலைய பொறுப்பதிகாரி உடன் கவணம் செலுத்த வேண்டும்.

Leave a Reply