மக்களுடைய சொத்துக்களை கொள்ளையடிக்காத முஸ்லீம் தலைவர்களை உருவாக்க வேண்டும்! – அநுர

தேர்தல் காலங்களில் அரிசி மற்றும் பணம் கொடுக்கின்ற அரசியலை தாம் செய்யவில்லை என்றும் நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மாற்றத்தை உருவாக்க கூடிய வகையிலேயே அரசியல் செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டம் சாய்ந்தமருது கடற்கரையில், நேற்று மாலை இடம்பெற்றது. 

அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

சிங்கள தலைவர்கள், சிங்கள இனவாதத்தை உருவாக்குகிறார்கள். அதேபோன்று முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் இனவாதத்தை உருவாக்குகிறார்கள். 

இவ்வாறு மக்களிடம் வந்து வாக்குகளை பெற்று இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி நடத்துகின்றார்கள். இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். 

இதனை நாங்கள் மாற்ற வேண்டிய தேவை இல்லையா? இந்த பிரதேசங்களிலே புதிய முஸ்லிம் தலைவர்களை உருவாக்க வேண்டும். 

உங்களை காட்டிக் கொடுக்காத பொதுமக்களுடைய சொத்துக்களை கொள்ளை அடிக்காத புதிய தலைவர்கள் தேவையில்லையா? அவர்களை நாங்கள் அணைவரும் ஒன்றிணைந்து உருவாக்குவோம்.

பழைமைவாத அரசியலை இல்லாமல் செய்து புதிய அரசியல் பயணத்துடன் பயணிக்க திசைகாட்டியுடன் ஒன்று சேருமாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply