13வது திருந்தச் சட்டம் வராமல் இருந்திருந்தால் தனிநாடு கிடைத்திருக்கும் – சாள்ஸ் தெரிவிப்பு

இனவாதிகளின் கொள்கைகளை கேட்டு அரசாங்கம் பயனித்ததாலேயே இன்று இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான பிரதான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பௌத்த மத பீடாதிபதிகளின் ஆலோசனைகளுக்கு அமைய ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்ததன் காரணமாகவே
இன்று இலங்கையில் பொருளாதா நெருக்கடி ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது என்றும் ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி 13 வது திருத்தச்
சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளதாக சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
13வது திருத்தச்சட்டம் அன்று நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் ஒருவேளை தமிழர்களுக்கு தனிநாடு கிடைக்ககூடிய
சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் என்றும் சாள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இந்தியாவை நம்பி இன்று இரண்டையும் இழந்து நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஒப்பந்தததின் மூலம் வடகிழக்கிற்கு மட்டுமல்ல 9 மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்றும் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply