இலங்கைக்கு கடன் உதவி வழங்குங்கள்! சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை

நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு கடன் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா அழைப்பு விடுத்துள்ளது.

கடன் வழங்குவதை துரிதப்படுத்தும் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நிலைமையை கண்காணிக்கவும், அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும் மற்றும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் உதவும் என தெரிவித்துள்ளார்.

இதற்காக தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஒரு நேர்மறையான பங்கை வகிப்பதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு நட்பு நாடு மற்றும் உண்மையான நண்பன் என்ற வகையில், சீனா இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு இயன்றளவு உதவிகளை வழங்கி வருவதாவும் கூறியுள்ளார்.

Leave a Reply