13ஜ ஏற்று தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கின்ற தலைவர்களுக்கு தக்கபாடம் புகட்டப்படும்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இருந்து போராடி வருகின்ற நிலையில் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவே எங்கே எமக்கு சுதந்திரம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பின் வடக்குகிழக்கு இணைப்பாளர் ம.சுகந்தினி கேள்வி எழுப்பியுள்ளனார்.

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக கருப்புக்கொடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அத்துடன் சோரம்போன தமிழ் தலைமைகள் 13வது திருத்ததை ஏற்று தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வதற்கு முயற்சிப்பதாக ம.சுகந்தினி குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply