பசறையில் ஆட்டோ – பஸ் விபத்து: ஐவர் படுகாயம்!

பதுளை – பசறை பிரதான வீதியில் 10 ஆம் கட்டைப் பகுதியில் ஆட்டோ மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆட்டோவில் பயணித்த ஐவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொரளையில் நகைகள் கொள்ளை: நான்கு பெண்கள் கைது!

Leave a Reply