கோழி பிரியாணி பார்சலுடன் வீ்ட்டிற்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வாத்துவ – பொடுபிட்டிய பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட கோழிக்கறியுடன் கூடிய ரைஸ் பார்சலில் சாப்பிட்டு அகற்றப்பட்ட கோழி எலும்புகள் இருப்பதாக நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாத்துவ பொடுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முறைப்பாட்டாளர் தனது மகளின் வேண்டுகோளுக்கு இணங்க, களுத்துறை நகரின் மையப்பகுதியில் உள்ள பிரதான உணவகம் ஒன்றில் நேற்றிரவு 950 ரூபாவிற்கு கோழியுடன் கூடிய ரைஸ் பார்சலை 950 ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த பார்சலை வீட்டிற்கு சென்று திறந்து பார்த்த போது சாப்பிட்டு அகற்றப்பட்ட கோழி எலும்புகள் காணப்பட்டமையினால் அன்றிரவே உணவக நிர்வாகத்திடம் காண்பித்ததாகவும் அவர்கள் மற்றொரு பார்சலை வழங்க சம்மதித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் பிரதம பொலிஸ் பரிசோதகர் தென்னகோன் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply