அண்ணனை கொடூரமாக கொலை செய்த 14 வயது சிறுவன்!

களுத்துறை, தேக்கவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் சகோதரன் ஒருவரைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் 14 வயது இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவனின் தாக்குதலில் படுகாயமடைந்த மூத்த சகோதரர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது இளைய சகோதரருடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரைப் பார்ப்பதற்காக அவர்களது தாய் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து இளைய சகோதரன் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.

அனுருத்த தனஞ்சய டி சில்வா என்றழைக்கப்படும் 26 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். 

Leave a Reply