கொள்கை அறிக்கையை முன்வைக்கும் ஜனாதிபதி – நிகழ்வை புறக்கணித்த தரப்புக்கள்!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று காலை ஜனாதிபதி தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது அரசியலமைப்பின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி முன்வைக்க உள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, சபை நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்படும்.

இந்த நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் அதிதிகள் என பலர் பங்கேற்கவுள்ளனர்.

இன்றைய அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் டளஸ் அழகப்பெரும தலைமையிலான தரப்பினரும் புறக்கணித்துள்ளனர்.

மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வை புறக்கணித்துள்ளனர்.

Leave a Reply