ரணில் முட்டாள் இல்லை: உண்மையான தமிழன் 13ஐ எதிர்ப்பான்- கஜேந்திரகுமார் எம்.பி கருத்து!

சிங்கள பௌத்த பேரினவாத தரப்புக்கள் 13வது திருத்தத்தை எதிர்பதற்கு பிரதான காரணம் அவர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள்   என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வீதிக்கு இறங்கிய பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார்கள் 13வது திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் 13வது திருத்தத்தை எதிர்பதாகவும் இந்த இரண்டுக்குமான நிலைப்பாடு தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

13வது திருத்தம் என்பது தமிழ் மக்களுக்கான தீர்வு இல்லை என்பதே தமது நிலைப்பாடு என்றும் தாம் 13வது திருத்தத்திற்கு எதிரானவர்கள் இல்லை என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்த சட்டத்தில் எந்த அதிகாரங்களும் இல்லை என்பது விவாத்திற்கு அப்பாற்பட்ட விடையம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். ரணில் விக்கிரமசிங்க மிகச்சிறந்த அறிவாளி அனுபவத்தை கொண்டவர் அவர் முட்டாள் இல்லை என்றும் அதனாலேயே 13வது திருத்தத்தை உண்மையான தமிழன் எதிர்ப்பான் என்று நன்கு அறிந்து வைத்துள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply