அநுரகுமார ஏற்கனவே ஜனாதிபதி ஆடையை அணிந்து முகநூலில் ஜனாதிபதியாகி விட்டார் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
“அவர் கனவு கண்டாலும் மக்களின் இதயங்களில் ஒரு போதும் ஜனாதிபதியாக முடியாது. அதனால் தான் அந்த கனவை தொடருமாறு அநுரகுமாரவிடம் கூறுகின்றோம். களப்பணியாற்றி இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம்” என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், புதிதாக அமுல்படுத்துவதற்கு எதுவும் இல்லை எனவும் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரியவும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் மேலும் பேசி முன்னெடுப்பது நல்லதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட பொதுஜன பெரமுனவின் வழிநடத்தல் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.