இலங்கையில் தேசிய கொடியை எரிப்பதற்கே சதி திட்டம் தீட்டப்பட்டது – மாணவர்கள் தகவல்

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் இறுதி நாள் நிகழ்வின் போது சிவப்பு மஞ்சள் கொடியினை நபர் ஒருவர் எரிக்க முற்பட்டதாக அன்றையதினம் தெரிவிக்கப்பட்டிருந்த போது இலங்கையின் தேசிய கொடியினை எரிப்பதற்கே சந்தேக நபர் முற்பட்டிருந்தாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைகழக மாணவர்களின் பேரணியில் இலங்கையின் தேசியக் கொடி எரிக்கப்பட்டதாகக் காண்பித்து 

மாணவர்களை கைதுசெய்து சிறையில் அடைப்பதும், மக்கள் எழுச்சிக்குக் களங்கம் ஏற்படுத்துவதுமே பிரதான நோக்கமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்கின்றனர்.

பேரணி ஏற்பாடுகள் முழுவதிலும் கலந்துகொண்டு, பேரணி முழுவதிலும் கோசமெழுப்பி வந்த ஒரு இளைஞன் ஒரு உளவாளி என்கின்ற விடயம் பேரணி முடிந்த பின்னரே தெரியவந்துள்ளதாக மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உளவாளி என்று சந்தேகிக்கப்பட்ட அந்த இளைஞனும், அவனது இரண்டு நன்பர்களும், தங்களுடன் இலங்கையின் தேசியக் கொடியை மறைத்து எடுத்துவந்திருந்தாக மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பெவபர் மைதானத்தில் பிரகடனம் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்த பொழுது சிங்கக்கொடியை தீவைத்து எரிப்பதற்கு முயற்சி செய்ததாகவும் அதனை அறிந்த மாணவர்கள் அந்த செயலைத் தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply