துருக்கி, சிரியா நிலநடுக்கம்: உச்சத்தை தொட்ட உயிரிழப்புக்கள்: தொடரும் மீட்புப் பணிகள்!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி – சிரியாவில் ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளதுடன் இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இந்த கோர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள அதேவேளை பலர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கபட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று மாலை நிலவரத்தின் படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் 8,574 பேரும்  சிரியாவில் 2,662 பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply