தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு சம்பவத்தின் பின்னணியில் பெரிய சூத்திரதாரி – சரத் வீரசேகர

பொரளையில் உள்ள தேவாலயத்தில் அண்மையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பெரிய சூத்திரதாரி இருப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இந்த சம்பவம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னேற்றத்தை சீர்குலைக்கும் முயற்சியாக இருக்கலாம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது இரண்டு நாட்களே சென்றுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதான சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பொலிஸாரின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடுவதானது பெரும் பிரச்சினைக்கு வழிவகுக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிடார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கைக்குண்டு விடப்பட்டதைப் போன்று இந்த சம்பவமும் ஒரு நாசகார செயலாக இருக்கலாம் என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Leave a Reply