தைப்பொங்கல் தினத்தில் வவுனியாவில் கைகலப்பு சம்பவங்கள் – 15 பேர் படுகாயம்

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவங்களில் 03 பெண்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் மாலை 04.00 மணி தொடக்கம் இரவ 12.00 மணி வரையான காலப்பகுதியிலேயே குறித்த சம்பவங்களில் பதிவாகியுள்ளன.

இவ்வாறு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 ஆண்கள் மற்றும் 03 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்கள் வவுனியா பூந்தோட்டம், புளியங்குளம், ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தககது.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணையினை வவுனியா, ஈச்சங்குளம், புளியங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply