மான் வேட்டையாடிய இருவர்! விரட்டிப் பிடித்த பொலிஸார்

கருவலகஸ்வெவ – சியம்பலேவ , நிகவெவ பகுதியில் மான் ஒன்றை வேட்டையாடிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள் பயணம் செய்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று (14) விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டதை அடுத்து, அந்த பகுதியை கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைத்த போது சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர் ஒருவர் வேட்டையாடிய மான் ஒன்றை தனது மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரை கைது செய்து விசாரணை செய்த கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், தப்பிச் சென்ற மற்றுமொரு சந்தேக நபரை புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் கருவலகஸ்வெவ 10 ஆம் கட்டை பகுதியில் வைத்து அவர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதான சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply