தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சக்திப் பொங்கல் விழா

தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சக்திப் பொங்கல் விழா நேற்று விமர்ச்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளான நேற்றைய தினம், நுனிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் ஒரு சிறப்பு விஷேடப் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

நேற்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் 40 பொங்கல் பானைகளுடன் குறித்த நிகழ்வு இடம்பெறுள்ளது.

இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணிமைத்தின் நிறுவுனர் சக்தி சுரேஷ் ஒருங்கிணைப்பில், தீவகம் பொறுப்பாளர் நாவலன் கருணாகரனின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து ஆலயத்தில் விசேடபூசை வழிபாடுகளும் நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்வுக்கான நிதி அனுசரனையினை பாலரமேஸ் கௌசிகா, முகிலன்,விசாகன், ஜெயராஜன் ,சுஜாத்தா,சம்மியா, சதுக்‌ஷன் , ஆகாஸ் ஆகியோரும் இணை நிதியனுசரணை நல்லையா இரத்தினத்தினாலும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply