மின்கம்பியில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு! இளைஞன் கைது

கெப்பட்டிபொல – வெலங்கஸ்தென்ன பிரதேசத்தில் வயல் ஒன்றிற்கு அருகில் மின்கம்பியில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 47 வயதுடைய பெண் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து, அனுமதியின்றி மின் இணைப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply