மட்டுவில் கத்தரிக்காய்க்கு இப்படி ஒரு நிலையா?

மட்டுவில் கத்தரிக்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளமையால் மார்ச் மாதத்தில் சந்தைகளுக்கு வருவது குறைவடையலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மட்டுவில் தோட்டங்களில் பயிரிடப்படும் கத்தரி அறுவடை பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தன்று ஆரம்பிக்கப்படும்.

கடந்தவாரம் பெய்த பெரு மழையால் கத்தரித் தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் பழுதடையும் நிலையில் காணப்படுகின்றது.

தற்போது தோட்டங்களில் வெள்ளம் காணப்படுவதால் மீள்நடுகை சாத்தியமற்றது.

அந்தவகையில் மார்ச் மாதத்தில் மட்டுவில் தோட்டங்களி லிருந்து விளையும் கத்தரிக்காய் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவது குறைவடையக்கூடும் என விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply