வாய் வார்த்தையில் இல்லாமல் ரணில் கூறியதை நடைமுறைப்படுத்த வேண்டும் – மனோ !

இன்றைய நாடாளுமன்ற உரையில் தெரிவித்த விடயங்ளை வெறும் வார்த்தையாக இல்லாமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைமுறையில் செய்து காட்டவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி கூறியிருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம். 

அதன் மூலம் இந்நாட்டின் முழுமையான குடிமக்களாக மலையக தமிழ் மக்கள் வாழும் நிலை ஏற்பட வேண்டுமென நாம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் எதிர்பார்க்கிறோம்.

இது இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்பில் இருந்து வெளிப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். 

இனி, இதை உரையுடன் நிறுத்திவிடாமல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைமுறையில் செய்து காட்ட வேண்டும்.

 

நாடாளுமன்றத்திற்கு செல்லாமல் உரையை பகிஸ்கரிப்பது என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவு எம்முடன் சேர்ந்து எடுக்கப்படவில்லை. ஆகவே, அதை பற்றி எமக்கு தெரியாது.

எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான உரை தொடர்பாக எமது கருத்துகளை நாம் நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply