பிக்குகள் 13க்கு எதிராக வீதிக்கு வருவார்கள் என்பதை ரணில் எதிர்பார்த்தார்! – ஹரினி அமரசூரிய

அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாசங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதையே  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்பார்த்திருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து அதனுடாக தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறார். 

நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஹரினி அமரசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரச செலவுகளை கட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு பல சுற்றறிக்கைகயை வெளியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் நிதி, மற்றும் காலத்தை வீணடிக்கும் வகையில் செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாத காலத்திற்குள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற கொள்கை உரையில் குறிப்பிட்ட விடயங்களை ஜனாதிபதி செயற்படுத்துவதில்லை.

கொள்கை திட்டத்தில் கலந்துக் கொள்வதால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதால் அக்கிராசன உரையை புறக்கணித்தோம்.

கொள்ளைகளை மாத்திரம் முன்வைத்துக் கொண்டு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது.

Leave a Reply