மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார் பௌஸி!

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி சற்றுமுன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

கொழும்பு மாநகரசபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் அவர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்திருந்தார்.இந்நிலையில் அவரின் வெற்றிடத்திற்கேக பௌஸி நியமிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply