கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகள் கடத்திச் செல்லப்படுவதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று அதிகாலை சேராக்குளி பகுதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான இரண்டு லொறிகளை கடற்படையினர் மறைத்து சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.



இதன்போது லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடலட்டைகள் மற்றும் சுறா இரகுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் 41 வயதுடைய எலுவாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் 49 வயதுடைய புத்தளத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடமிருந்து 4 உரைப்பைகளில் 239 கிலோ கிராம் கடலட்டைகளும் 19 உறைப்பைகளில் 921 கிலோ கிராம் எடைய்டைய சுறா சிறகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இதன்பொழுது சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளையும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு லொறிகளையும் கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்தனர்.




