யானை – காக்கை – மொட்டு அரசை வீட்டுக்கு விரட்டியடித்தே தீருவோம் – சஜித் சூளுரை!

“தமது ஆட்சிக்காலத்தை நீடிக்கப் பல்வேறு சதிகளை மேற்கொள்ளும் யானை – காக்கை – மொட்டு அரசை வீட்டுக்கு விரட்டியடித்தே தீர வேண்டும். பிறக்காத தலைமுறையும் கடனாளியாகாமல் இருக்க நாம் அனைவரும் இப்போதே ஒன்றிணைவோம்.”

– இவ்வாறு அழைப்பு விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

வெலிமடையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வெலிமடை மரக்கறி விவசாயிகள் படும் இன்னல்களை நாட்டு மக்கள் உணர்ந்தாலும் யானை – காக்கை – மொட்டு அரசு அதனைச் சிறிதும் பொருட்படுத்துவதாகவே இல்லை.

இந்த அரசு தமது ஆட்சிக்காலத்தை நீடிக்கப் பல்வேறு சதிகளை மேற்கொள்கின்றது.

இவ்வாறு பல்வேறு சதிகளை மேற்கொண்டு எமது நாட்டின் வாழ்வாதாரத்தைச் சீரழித்து மக்களின் பணத்தை கொள்ளையடித்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

திருடர்களைப் பிடிப்பதோடு மாத்திரம் நின்றுவிடாது, திருடப்பட்ட பணத்தையும் நாட்டுக்கு கொண்டு வந்து பிறக்காத தலைமுறையாவது கடனாளியாகாமல் இருக்கட்டும். அதற்காக முடிந்த அனைத்தையும் செய்வோம்” – என்றார்.

Leave a Reply