மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சேவையாளர் சங்க புதிய நிர்வாக தெரிவு!

மன்னார் மாவட்ட முச்சக்கர வண்டி சேவையாளர் சங்க புதிய நிர்வாக தெரிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மாலை மன்னார் நகர  மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன் மற்றும் முன்னாள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன், மன்னார் நகர போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது புதிய ஆண்டு நிர்வாக தலைவராக எஸ்.சுபதீபன் தெரிவுசெய்யப்பட்டார்.

செயலாளராக எம்.எப். பாசில் பொருளாளராக  எம்.இஜாஸ்  உள்ளடங்கானாள  நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் போது மன்னார் முச்சக்கர வண்டி சேவையாளர்கள் அனைவரும் மன்னார் மக்களுக்கான சிறப்பான, பாதுகாப்பான சேவைகளை வழங்குமாறு புதிய நிர்வாக குழு கூட்டத்தில் அங்கத்தவர்களுக்கு வருகைதந்த அதிதிகளால்  அறிவுறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply