பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் பதவியிலிருந்து இடைநிறுத்தம்

இந்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தனது பதவியை இராஜினாமா செய்யாமல் வேட்புமனுக்களை சமர்ப்பித்த அநுராதபுரம் கல்லூரியின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.ஆர். நிஷாந்த நேற்று இதை தெரிவித்தார்.

அனுராதபுரம் ஜனாதிபதி கல்லூரியில் அதிபராக பணிபுரிந்த உபுல் விஜிதசிறி ஓவிட்டிகெதரவே அதிபர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இவர் தனது பதவியை இராஜினாமா செய்யாமல் இவ்வருடம் (2023) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி அனுராதபுரம் மாநகர சபைக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பில் மாகாண கல்வி திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தர அதிகாரிகள் தேர்தலில் நின்றால் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவர் ஒரு தரம் பெற்ற அதிபர்.

இந்நிலையில், பதவியை இராஜினாமா செய்யாமல் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த குற்றச்சாட்டில் விசாரணையின் கீழ் அவரது சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.ஆர். நிஷாந்த விசாரணையில் தெரிவித்தார்.

Leave a Reply