இலங்கை கடற்கொள்ளையர்கள் குறித்து வௌியான அதிர்ச்சி செய்தி! SamugamMedia

இலங்கை கடற்பரப்பில் 7தமிழக மீனவர்களை கத்தி கட்டையால் தாக்கியதில் முருகன் என்பவருக்கு வாள் வெட்டு காயம் ஏற்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகப்பட்டினம் மாவட்டம்வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று முன்தினம் மீன்பிடிக்கசென்ற நம்பியார் நகரை சேர்ந்த 7 மீனவரை இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 படகில் 10 பேர் கத்தி, கட்டையுடன் சென்று தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது, படகு உரிமையாளர் முருகனுக்கு கையில் வாள் வெட்டு காலம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்கை நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இதில் நாகை மீனவர்களிடம் இருந்து திசைகாட்டும் கருவி, வாக்கிடாக்கி ஆகியன பறித்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply