இலங்கையில் பயிரிட்ட கலப்பின மிளகாய் இனங்களின் உற்பத்தி வெற்றி – விவசாய அமைச்சு! SamugamMedia

2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டு மக்களின் நுகர்வுக்குத் தேவையான செத்தல் மிளகாயினை உற்பத்தி செய்ய முடியுமெனவும் அதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

சமீபத்தில் அமுகப்படுத்தப்பட்ட இரண்டு கலப்பின மிளகாய் இனங்களின் வெற்றியின் காரணமாக இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.

இரண்டு மிளகாய் இனங்களிலும் இலை சுருட்டு நோயின் எதிர்ப்பு சக்தி உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலை சுருட்டு நோயின் தாக்கம் காரணமாக பச்சை மிளகாயின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வருடாந்த உலர் மிளகாய்த் தேவை 55,000 மெற்றிக் தொன்களாகும். 

நாட்டில் இதுவரை 5000 மெற்றிக் தொன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 50,000 மெற்றிக் தொன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 

எனவே 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டுக்குத் தேவையான முழு அளவிலான மிளகாயை உற்பத்தி செய்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

இந்த நாட்டில் பச்சை மிளகாயின் ஆண்டுத் தேவை 70,000 மெட்ரிக் தொன்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். 

கடந்த வருடம் இலங்கையில் 35,718 மெட்ரிக் தொன் பச்சை மிளகாய் உற்பத்தி செய்யப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட உலர் மிளகாயின் அளவு 47,696 மெட்ரிக் தொன் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply