வீழ்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் திறமையும் இயலுமையும் கொண்ட அணி எங்களிடம்- சஜித் பெருமிதம்!SamugamMedia

நாட்டைக் கட்டியெழுப்பும் திறமையும் இயலுமையும் ஆற்றலும் கொண்ட அணியினர் ஐக்கிய மக்கள் சக்தியிடமே இருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

வலப்பனை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நிறுவனங்களுக்குச் சொந்தமான நாட்டில் விவசாயம் செய்யப்படாத பாரியளவிலான காணிகள் பல உள்ளன. அவை இன்றளவில் பாழ் நிலமாக மாறியுள்ளன. தொழிலாளிகளாக உழைக்கும் பெருந்தோட்ட சமூகத்தையும், இடம் உரித்தற்ற இளைஞர் சமூகத்தையும் சாதி பேதமின்றி ஒன்றாகக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.

அவர்களை இடமொன்றுக்கும் சிறிய தேயிலை தோட்டத்தின் உரிமையாளராகவும் உருவாக்குவதே எனது நோக்கம். பொருளாதாரத்தைச் சுறுக்குவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

இந்த நாட்டை சோசலிசத்தினாலோ அல்லது முதலாளித்துவத்தினாலோ கட்டியெழுப்ப முடியாது.சமூக ஜனநாயகப் போக்கொன்றாலே இதை மேற்கொள்ள வேண்டும்’ – என்றார்.

Leave a Reply