விக்னேஸ்வரன் எம்.பியால் உபகரணங்கள் வழங்கி வைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சி .வி.விக்னேஸ்வரனின் 2021ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சங்கானை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முன்பள்ளிகள், சனசமூக நிலையங்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டு கழகங்கள் ஆகியவற்றுக்கு இவ்வாறு உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது விளையாட்டு உபகரணங்கள், வீதி மின்விளக்குகள், அலுமாரிகள், தளபாடங்கள் கணினி மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி .வி.விக்னேஸ்வரன் ,சங்கானை பிரதேச செயலர் உட்பட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

கமநல காப்புறுதி சபையின் தலைவர் இராஜினாமா!

Leave a Reply