அரசாங்கத்தின் கோழைத்தனமான செயற்பாட்டிற்கு எதிராக கந்தளாயில் ஆர்ப்பாட்டம்!SamugamMedia

தேர்தலை ஒத்திவைத்து ஜனநாயகத்தை தடுக்கும் அரசாங்கத்தின் கோழைத்தனமான செயற்பாட்டிற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கந்தளாய் பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நேற்றையதினம்(19) நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை செயற்பாட்டாளர் சட்டத்தரணி அருன் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிண்ணியா செயற்குழு உறுப்பினர்களான எம்.இ.எச்.எம்.ராபி (ஆசிரியர்),அஷ்ஷெய்ஹ் பஷீர் (இஸ்லாஹி) ஆகியோருடன் பல சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply