மின்னல் தாக்கம் – இரண்டு மாடி வீடொன்றில் தீப்பரவல்! SamugamMedia

மின்னல் தாக்கம் காரணமாக நாவல – கொஸ்வத்தை பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று மாலை பதிவாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் மின்னல் தாக்கம் காரணமாக நபர் ஒருவரும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அவரின் நிலைமை கவலைக்கிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டே மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் கூரைக்கு எஸ்பெஸ்டாஸ் பொருத்தப்பட்டிருமையினால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply