நாட்டிலுள்ள வயோதிபர்களுக்கு நிவாரணம்- வெளியான விசேட அறிவிப்பு!SamugamMedia

வயோதிபர்களின் நிலையான வைப்புத்தொகைக்கு அறவிடப்படும் நிறுத்திவைப்பு வரி தொடர்பில் இன்று (24) சில நிவாரணங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிலையான வைப்புத்தொகை முதலானவற்றுக்கு ஐநூறு ரூபா காப்பு வரி அறவிடப்படும் எனவும், ஓராண்டுக்குப் பின்னர் வழங்கினாலும், அந்த வரி நீக்கப்பட்டால் மக்களுக்கு நிம்மதியாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களின் நிரந்தர வைப்புத் தொகைக்கு விதிக்கப்படும் வரியை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றார்.

முடிந்த போதெல்லாம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பெப்ரவரி 20 ஆம் திகதி வரையான வருமானம் மற்றும் செலவினங்களுக்கிடையேயான வித்தியாசம் 450 பில்லியன் ரூபாவாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply