மாகாணசபை தேர்தலை எதிர்கொண்டு, பலரின் போலி முகங்களை மக்களுக்கு காட்டுவோம்! – கஜேந்திரகுமார்

மக்களுக்கு பலரின் போலி முகங்களை காட்டுவதற்காக, மாகாணசபை தேர்தலை எதிர் கொள்வோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் எவ்வளவு ஆபத்தானது என்பதை மக்களுக்கு காண்பிப்பதற்காக எதிர்வரும் 30ஆம் திகதி பாரிய பேரணி ஒன்றை நல்லூரில் நடத்துகின்றோம்.

அதனை தடுத்து நிறுவதற்கு பல சதிகள் நடைபெறுகின்றன. ஆனாலும் திட்டமிட்ட படி பேரணி நடைபெறும்.

மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்று, அதனை 13ஆவது திருத்தத்துக்குள் முடக்குவதற்கு எத்தனிக்கும் தரப்புக்கு தான் இப்போது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது எமது பேரணி.

நாங்கள் அதில் வெற்றி பெற்று இந்திய முகவர்கள் தமிழ் மக்களுக்கும் செய்யவிருந்த கெடுதலை அம்பலப்படுத்துவோம். அது தான் அவர்களின் பயம்.

அந்த வகையில் தான் நாம் தேர்தலில் போட்டியிடுவோம். ஏனைய தமிழ் தரப்புகள் 13 ஆவது திருத்தத்தை ஆதரித்து மக்களை புதை குழியில் தள்ளுவதற்கு முயறசிக்கின்றனர்.

ஆனால் நாம் இந்த தேர்தலை எதிர்கொண்டு, 13ஆவது திருத்தத்தின் ஆபத்தையும், பலரின் உண்மை முகத்தையும் மக்களும் அம்பலப்படுத்துவோம். – என்றார்.

Leave a Reply