
கொழும்பு, ஜனவரி 27: கொரோனா தொற்றுக்கு எதிரான பைசர் பூஸ்டர் தடுப்பூசி நாட்டில் இதுவரை 5 மில்லியன் பேருக்கு செலுத்தத்தப்பட்டுள்ளது என்று மருந்துப் பொருட்களின் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைக்கான ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “நாட்டில் வியாழக்கிழமை 30,253 பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டன. இதனுடன் சேர்த்து, இதுவரை 5 மில்லியன் பேருக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
ஓமிக்ரோன் திரிபால் நாட்டில் கொரோனா பாதிப்பு சடுதியாக அதிகரித்துள்ளது.
ஜனவரி 19 முதல் 25 வரை, தொடர்ச்சியாக தினம்தோறும் 800 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்றபடுவது குறிப்பிடத்தக்கது.





