இறால், நண்டு, மீனுக்காக யாழ் மாநகர சபை ஆணையாளர் விலை போனாரா?

யாழ்ப்பாண மாநகர சபையில் தொழிலாளர்கள் தற்போதைய ஆணையாளரால் மதிக்கப்படுவதில்லை என
வடபிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர்,மார்டின் அன்டன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில்,

யாழ் மாநகர சபையிலே பல ஆணையாளர்கள் வந்து சென்றுள்ளனர்.சிறந்த தொழிலாளர்கள் பலர் நீண்ட கால பணி புரிந்து நன் மதிப்பை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தற்போதைய ஆணையாளருடன் சேர்ந்து வேலை செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.சிறிய தவறு நடந்தாலும்,விசாரணை இன்று வேலையை விட்டு நிறுத்து என்று அவர் கூறுகின்றார்.

சந்தைகளுக்கு பொறுப்பாய் இருக்கும் ஒருவர் அடாவடி செய்கின்றார்.திடீர் என்று உடல் நலம் சரியில்லை என்று லீவு எடுத்தால் கூட அவர்களை 20 நாட்கள் வேலையிலிருந்து நிறுத்தி விடுகிறார்கள்.

சேவியர் என்று சொல்லப்படும் சந்தைக்கு பொறுப்பாய் உள்ள நபரின் கீழ் பல தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.அவர் நினைத்தால் யாரையும் வேலையாள் நிப்பாட்டுவார்.

இந்த அராயாயத்துக்கு பொறுப்பாய் ,மாநகர சபை ஆணையாளரும் துணைபோகின்றார்.

அவரை மாற்றுங்கள் என்று ஆணையாளரிடம் கூறினோம்,அது நடைபெறவில்லை.

ஏன்னென்று நாம் ஆராய்ந்த போது சந்தைகளுக்கு பொறுப்பாக உள்ள நபர் ஆணையாளருக்கு மீன், நண்டு ,இறால் வழங்கி கையிக்குள் வைத்துள்ளார் என தெரியவருகிறது என்றார்.

Leave a Reply