இரும்பு பெரலில் நீராடிக் கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு! மனைவி காயம் SamugamMedia

இரத்தினபுரி – தெல்வல, பெபோட்டுவ பகுதியில் நேற்று (25) மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 42 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு பலியானதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு உலோக வாளியைப் பயன்படுத்தி குறித்த நபர் வீட்டுக்கு வெளியே குளித்துக் கொண்டிருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்த மின்னல் தாக்கத்தினால் குறித்த நபரின் மனைவியான 36 வயது பெண் ஒருவரும் காயமடைந்து இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெல்வல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply