பா.ஜ.கவினால் இலங்கையில் மத முரண்பாட்டை தோற்றுவிக்க முடியாது- கே.ரி.கணேசலிங்கம் கருத்து!SamugamMedia

மத அடிப்படையிலான பிரிப்பினையோ அல்லது முரண்பாட்டினையோ உருவாக்க முயலும் சக்திகளிற்கு பதிலளிக்கும் பொறுப்பு ஈழத்தமிழர்களிடம் இருந்துள்ளதாக அரசியல் ஆய்வாளரும் பேராசிரியருமான கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் இந்து மதத்தின் எழுச்சியூடாக அரசியல் இருப்பினை பாரதிய ஜனதா கட்சி கட்டியெழுப்பியுள்ளது.

ஆனால் அதே சாயலிற்கு உட்படுத்தி ஈழத்தமிழர்களின் அரசியலினை கையாள முடியுமென கருதுவதும், அதற்கான எண்ணங்களினை அது முதன்மைப்படுத்துவதும் மிக மோசமான அரசியல் கலாசாரத்தின் மரபாகவே தோன்றுவதாக கே.ரி.கணேசலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்கள் மதங்கள், தமது பிரதேசம், ஆகியவற்றினை கடந்து ஒருமைப்பாட்டுடன் இயங்க வேண்டும் என்ற மனப்பாங்குடனே சிந்தனைகளும் எண்ணங்களும் காணப்படுகின்றன.

ஆகவே மத அடிப்படையில் பிரிப்பினையோ அல்லது முரண்பாட்டினையோ உருவாக்க முயலும் சக்திகளிற்கு பதிலளிக்கும் பொறுப்பு ஈழத்தமிழர்களிடம் இருக்கின்றது.

மதமாற்றங்களும், மத உரையாடல்களும் மதங்களிற்கு பின்னால் இருக்க கூடிய வடிவங்களும் ஈழத்தமிழர்களினை பொறுத்த மட்டில் ஒரே விதமானதும் மற்றும்
ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான கருத்துக்களினையே எண்ணமாக கொண்டுள்ளார்கள்.ஆயுத போராட்டம் மற்றும் தேசிய விடுதலை போராட்ட கலப்பகுதிகளிலும் அவ்வாறான எண்ணங்களுனே பயணித்தார்கள்.

ஆகவே பாரதிய ஜனதா கட்சி பிரிவு நிலையினை ஏற்படுத்த முயற்சிப்பதற்கான கேள்விகளிற்கு பதிலளிக்கும் தேவைப்பாடு கட்டாயம் எழும் என்றும் கே.ரி.கணேசலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான செய்முறைகளினை மேற்கொள்வோர் மீது அதிக கண்டனங்கள் மற்றும் வெறுப்புணர்வும் ஈழத்தமிழர்களிடம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது என்றே தோன்றுவதாக கே.ரி.கணேசலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply