நாட்டை முடக்காவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளலாம் – அமைச்சர் ஆலோசனை

நாட்டை முடக்காமல் முன்னோக்கி பயணித்தால் அடுத்த சில மாதங்களில் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீள முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா தொற்றுநோயே முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு நாடு மீண்டும் முடக்கப்பட்டால், தற்போதைய நெருக்கடி மேலும் மோசமடையக்கூடும் என்றும் அவர் கூறினார்.

நாடு இன்று சந்தித்த பல நெருக்கடிகளுக்கு டொலர் நெருக்கடியே பிரதான காரணம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் பெரும் செலவை செய்ததால் இந்த நிலை ஏற்பட்டது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

Leave a Reply