18 வயதைப் பூர்த்தி செய்துள்ளவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!

18 வயதினைப் பூர்த்தி செய்துள்ளவர்கள் நான்கு கட்டங்களாக வாக்காளர் பட்டியலில் தம்மை பதிவு செய்து கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பெப்ரவரி முதலாம் திகதியுடன் 18 வயதினை பூர்த்தி செய்துள்ளவர்கள் தற்போதைய நிலையில் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் இரண்டாவது கட்டமாக பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

இதேபோன்று, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் அடுத்த கட்டத்தில் வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்படுவார்கள்.

அத்துடன், 18 வயது பூத்தியாகியுள்ள அனைவரையும் வாக்காளர் பட்டியலில் விரைவாக பதிவுகளை முன்னெடுக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

Leave a Reply