கிளிநொச்சியில் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வர்த்தக சந்தை!SamugamMedia

சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் விற்பனை சந்தை இன்று(24) ஆரம்பமானது.

வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் பசுமை பூங்கா வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த சந்தை, இன்றும் நாளையும்  இடம்பெறவுள்ளது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் வடமாகாண மகளிர் அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, வடக்கு மாகாணத்தில் சுய தொழில் முயற்சியாளர்களாகவும், உற்பத்தியாளர்களாகவும் உள்ள பெண்களின் உற்பத்திகளின் கண்காட்சியும், விற்பனை சந்தையும் இடம்பெற்றது.

Leave a Reply