மக்கள் அழிந்தாலும் அது குறித்த எந்த கவலையுமின்றி புலிகள் அழிய வேண்டும் என்பதே சக தமிழ் கட்சிகளின் உள் நோக்கமாக இருந்தது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆகவேதான் அழிவு யுத்தத்தை ஆதரித்தார்கள், காரணம் தமது இருப்பை தக்க வைப்பதுதான்.
அண்ணை எப்ப சாவான் திண்ணை எப்ப காலி என்று காத்திருந்த இந்த வேட தாரிகள், இப்போது அதே புலிகளின் பெயரை வைத்து கூத்தாடுகின்றார்கள்.- என்றார்.