காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் நாட்டில் நிலையான பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை எட்டமுடியாதென ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஸ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
பருவநிலை மாற்றமென்பது எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது.
நாம் அதில் கவனம் செலுத்தவில்லை என்றால், பொருளாதார வளர்ச்சி அல்லது மறுமலர்ச்சி என்பது தற்காலிகமானதாகவே இருக்கும். இது மிகவும் கடினமாக இருக்கும்.
வருங்கால சந்ததியினருக்கு எதுவும் இருக்கப் போவதில்லை. எனவே இது மிகவும் முக்கியமானது. காலநிலை மாற்றம் என்பது பொருளாதார ஆதரவையும் குறிக்கிறது.
காலநிலை மாற்றத்தை மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற நிறைய சர்வதேச நாடுகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.