திருகோணமலை -சேருநுவர 222 இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் 25 தமிழ்,முஸ்லிம்,சிங்கள குடும்பங்களுக்கு இன்று சனிக்கிழமை உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு சேருநுவர பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
உலருணவு பொருட்களுக்கான நிதிப் பங்களிப்பை கனடாவில் வசிக்கும் ராஜ்மோகன் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக பிரிகேடியர் N.s.s.டயஸ் கலந்து கொண்டார்.அத்தோடு சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் வரபிரகாசம் டொமினிக் மனோகரன் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.