900 சுற்றுலா பயணிகள் மற்றும் 463 பணியாளர்களுடன் வைக்கிங் நெப்டியூன் (viking neptune) என்ற அதிசொகுசு பயணிகள் கப்பல் இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
தாய்லாந்திலிருந்து இந்தக் கப்பலில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் நாளை வரை நாட்டில் தங்கியிருப்பதோடு, அக்காலப்பகுதியில் கொழும்பு, கண்டி, காலி, பெந்தோட்டை, பின்னவல போன்ற இடங்களுக்குச் செல்லவுள்ளனர்.