இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் துறைமுகத்தில் தேங்கி கிடக்கின்றதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்க் கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படுள்ள முட்டைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் துறைமுகத்தில் தேங்கி கிடக்கின்றன. அதனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
முட்டைகளின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகயை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.
எனினும், சட்டத்திட்டங்களால் பண்டிகை காலத்தில் மக்கள் முட்டைகள் இன்றியே இருக்க வேண்டும். 2 மில்லியன் முட்டைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்த தொகுதி முழுவதும் துறைமுகத்தில் தேங்கி கிடக்கின்றதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.